கைக்குழந்தையுடன் மலை ஏறி சாகசம் புரிந்த நடிகை

168
2 மாத குழந்தையுடன் 6300 அடிஉயர மலைமீது ஏறி சமீரா ரெட்டி சாகசம்
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார். பெண் குழந்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சமீராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்தது.
சமீரா ரெட்டிஅவர் தனது இரண்டு மாத குழந்தையுடன் கர்நாடகாவில் உள்ள முல்லயநாகிரி சிகரத்தில் ஏறினார். 6300 அடி உயரம் கொண்ட அந்த உயரமான மலையில் தனது கைக்குழந்தையுடன் ஏறியது உற்சாகம் அளிக்கும் வகையில் இருந்ததாக சமீரா கூறியுள்ளார். மலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மலை ஏறும்போதே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
SHARE