தர்பார் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர்ஸ்டார் மனைவி

158
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் மனைவி லதாவுடன் ரஜினி- வைரலாகும் புகைப்படம்

மனைவி லதாவுடன் ரஜினி
முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்துவருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் 2020 பொங்கல் அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
மனைவி லதாவுடன் ரஜினி
இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்க, அவரை பின்னால் இருந்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE