செட்டிக்குளம் பிரதேசத்தில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வெதுப்பகம் திறந்துவைப்பு.

387

 

 

SAMSUNG CAMERA PICTURES

 

 

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திhல் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட வெதுப்பகம் அமைக்கப்பட்டு அந்த கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை(6) காலை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகமானது  1.5 மில்லியன் ரூபாய் செலவில் அந்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பிரதான நோக்கோடு அமைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ,  சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன் மற்றும் திரு.தியாகராஜா , வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் ,செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அப்பகுதியின் கிராம சேவகர் ஆகியோர் இணைந்து குறித்த வெதுப்பகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்து பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

(புகைப்படங்களும், வீடியோவும் இணைப்பு)

SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES

unnamed (6)unnamed (7)unnamed (8)unnamed (9)unnamed (10)unnamed (11)unnamed (12)unnamed (13)
SHARE