எஸ்.ஜே.சூர்யாவுக்கு கச்சிதமாக பொருந்தும் நடிகை

134

மீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த ‘மான்ஸ்டர்’ படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார். இது, ஒரு திகில் படம். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்கதாநாயகியை தேர்வு செய்யாமலே படப்பிடிப்பை தொடங்கினார்கள். இந்த நிலையில், கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கரே ராதாமோகன் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.
SHARE