
மதுபாலா, அரவிந்த்சாமி
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, கள்ளபார்ட்ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அவர் நடித்து வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார்.

Related Tags :