
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம் பெறுகின்றன.
இந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
தற்போது மும்பையில் கடைசி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இன்று காலை இமயமலை புறப்பட்டுச் சென்றார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.