சில விடயங்களை நான் எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்!!

169
முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் - தமன்னா திட்டவட்டம்

தென்னிந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகைகளில் தமன்னாவும் முக்கியமானவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘சைரா’ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் தமன்னா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமன்னா சினிமாவில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை ஒப்பந்தத்தில் சேர்த்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.
தமன்னா
முத்தக் காட்சிகளில் நடிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா தெரிவித்துள்ளதாவது, “இன்னும் சினிமாவில் நான் முத்தக் காட்சியில் நடித்தது கிடையாது. நான் நடிக்க வந்ததில் இருந்து அதைத் தொடர்கிறேன். நான் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று 13 வயதிலேயே நினைத்துவிட்டேன். அதை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
SHARE