வங்கதேச கட்டிட விபத்தில் 4 பேர் பலி

366
வங்கதேசத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவின் தென்மேற்கே 335 கி.மீ. தூரத்தில் உள்ள துறைமுக நகர் மொங்லா பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இதில் இன்று தொழிலாளர்கள் உள்பட 150 பேர் இருந்தனர். அப்போது திடீரென அந்த தொழிற்சாலையின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், அனைவரும் இடிபாட்டிற்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவத்தினர் 40 பேரை உயிருடன் மீட்டனர். 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100 பேருக்கு மேல் இடிபாட்டிற்குள் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE