தளபதி 64-ல் படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அது வெறும் வதந்தி!!

144
தளபதி 64ல் இருந்து விலகலா?- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
‘பிகில்’ படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 64-வது படம். விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் அவருடன் நடிக்கிறார்கள். விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
விஜய் சேதுபதி, விஜய்இந்த நிலையில் சேவியர் பிரிட்டோ, அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் பரவியது. வேறு ஒரு நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்தி என்றும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
SHARE