
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சாய்கிருஷ்ணா கடந்த அக்டோபர் 18-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
