சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் அகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சசிகுமார். இவர் தற்போது பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான ஆக்ரோஷமான சண்டைக்காட்சி இன்று படமாக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர்.
ஆக்ரோஷமாக படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியில் சசிகுமார் கை முறிந்தது. உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் சசிகுமாரை ஓய்வெடுக்க சொல்ல, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.