விஜய் சேதுபதியுடன் நடிக்கும் விவேக்

137
பிரபல நடிகருடன் முதன்முறையாக இணையும் விவேக்
விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக முதலில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி, விவேக்
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதியுடன் விவேக் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் விவேக் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கிறார்.
SHARE