
நடிகை நயன்தாராவுக்கு நேற்று 35வது பிறந்தநாள். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது அமெரிக்காவில் உள்ள நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் உடன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நயன்தாரா அடுத்து ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:- “நானும் ரவுடிதான் படத்தில் இருந்தே நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். இந்த படம் தொடர்பாக ஒரு நாள் மாலை வேலையில் அவரை சந்தித்து அரை மணிநேரம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்துக்கொடுப்பதாக தெரிவித்தார். படம் தொடங்கவிருக்கிறது இப்போதே படக்குழுவினர் பயபக்தியோடு அசைவ உணவகங்களை தவிர்த்து சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பவானி அம்மனின் இன்னொரு பெயர் ‘மூக்குத்தி அம்மன்’ அதனால் இந்த பெயரை வைத்தேன்” என்றார்.