
தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க பேசி வருகிறார். சினிமாவில் தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துவிட்டு போனால் போதும் என்றே நினைத்திருந்தேன்.
ஆனால் அதையும் தாண்டி, ஒரு படத்தின் விளம்பரத்துக்காக மெனக்கெட வேண்டும் என்பதை போக போக தெரிந்துகொண்டேன். சினிமாவில் எந்த உயரத்தில் இருந்தாலும் படத்தின் புரமோஷனுக்காக இறங்கி வந்தே ஆக வேண்டும். மக்களிடம் ஒரு படம் செல்ல, நாம் மக்களிடம் பழக வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.
