
தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சிப்பவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். விமர்சனம் செய்பவர்களை விட்டு நாம் ஓடிப்போய்விட முடியாது. எந்த மாதிரி விமர்சனமாக இருந்தாலும் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை விமர்சிக்கிறவர்கள் ஏதோ ஒரு பிரச்சினையால் வேதனைப்படுகிறார்கள் என்பது எனது கருத்து.
விமர்சிப்பவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் கோபம் இருந்திருக்க வேண்டும். இல்லையானால் அவர்கள் வாழ்க்கை மீது அவர்களுக்கே வெறுப்போ அல்லது கஷ்டமோ இருந்திருக்கும். அந்த கோபங்களை சமூக வலைத்தளத்தில் செய்யும் விமர்சனங்கள் மூலமாக அவர்கள் தீர்த்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அதிதி ராவ் கூறினார்.