நேர்கொண்ட பார்வை 200 கோடி உலகம் முழுவதும் வசூல்

137

அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் வெளியான படங்களில் ஒன்று நேர்கொண்ட பார்வை. இப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை பற்றி பேசியது.

ஒரு முன்னணி நடிகராக இருந்து அஜித் இப்படியொரு கதையில் நடித்துள்ளாரே பாராட்ட வேண்டிய விஷயம் என பலரும் கூறினர்.

மக்களிடம் படம் நல்ல வரவேற்பு பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பல தகவல் வந்தது.

இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் போனி கபூர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் படம் ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூலித்தது, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நல்ல வசூல் என பேட்டி கொடுத்துள்ளார்.

SHARE