நிறைவேறியது சதீஸின் 25 ஆண்டுகால கனவு

158
நீண்ட நாள் கனவு நிறைவேறியது- உற்சாகத்தில் சதீஷ்
ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் காமெடி வேடத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.
சதீஷ், ரஜினிஇந்நிலையில், நடிகர் சதீஷ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சதீஷுக்கு நேற்று திருமணம் ஆன நிலையில், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது 25 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சிவா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
SHARE