இலங்கையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல்

417

 

இலங்கையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முல்லைதீவு கண்டாவளையில் நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மோட்டர் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவர் பகீரதி மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பகீரதி துாக்கி வீசப்பட்ட நிலையில் அபாய குரல் எழுப்பியுள்ளனார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது பகீரதி காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றம் சாட்டப்பட்டு முருகேசு பகீரதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டருந்தது. எனினும் கடந்த வாரம் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

முருகேசு பகீரதி அவரின் மகளுடன் பிரான்ஸில் வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கைது செய்யப்பட்டுள்ள பகீரதியிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணை

பிரான்ஸ் திரும்பும் வழியில் கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் கைது­செய்­யப்­பட்ட முன்னாள் விடு­தலைப் புலி­களின் கடற்­ப­டை பெண் தள­பதி என கூறப்­படும் முரு­கேசு பகீ­ரதி மீது பயங்­க­ர­வாதக் குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

அவரின் மேற்­பார்வை அல்­லது ஆலோ­ச­னை­களின் கீழ் இங்கு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டதா என்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தற்­போது விசா­ரணை செய்­து­வ­ரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

41 வய­தான பகீ­ரதி கைது செய்­யப்­படும் போது அவ­ருடன் இருந்த அவ­ரது 8 வயது பிரான்ஸ் குடி­யு­ரிமையைப் பெற்ற மகளும் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ் உள்ள பகீ­ர­தி­யு­ட­னேயே தங்­கி­யுள்­ள­தா­கவும் இது தொடர்பில் பிரான்ஸ் தூது­வ­ரா­ல­யத்­துக்கு தக­வல்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண சுட்­டிக்­காட்­டினார்.

பிரான்­ஸி­லி­ருந்து கடந்த மாதம் இலங்கை வந்­தி­ருந்த பகீ­ர­தியும் அவ­ரது 8 வயது மகளும் கிளி­நொச்­சியில் உள்ள பெற்றோர் மற்றும் சகோ­த­ரர்­க­ளுடன் விடு­மு­றையை கழித்­து­விட்டு திரும்பும் வழி­யி­லேயே கடந்த திங்­கட்­கி­ழமை அதி­காலை 5.40 மணி­ய­ளவில் விமா­ன­நி­லை­யத்தில் கைது செய்­யப்­பட்­டார். டுபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்­பட்ட போதே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

விடு­தலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்­டுகள் இருந்­துள்ள பகீ­ரதி 2005-ஆம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்­வேறு தாக்­குதல் நட­வ­டிக்­கை­களில் பங்­கெ­டுத்­தி­ருந்த­தாக சந்­தே­கிக்கப்­ப­டு­வ­தா­கவும் அது தொடர்­பி­லேயே தற்­போது விசா­ரணை இடம்­பெ­று­வ­தா­கவும் குறிப்­பிட்ட அஜித் ரோஹண இது­வரை அவர் நேர­டி­யாக தாக்­கு­த­லுடன் தொடர்பு பட்­டமை குறித்­தான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

‘உண்­மையில் இந்தப் பெண் 1997-ஆம் ஆண்­டி­லி­ருந்து 2000ஆ-ம் ஆண்­டு­வரை கடற்­பு­லி­களின் தலை­வி­யாக இருந்­துள்ளார். அவர் 2005-ஆம் ஆண்டில் இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார். அவர் அவ­ரது காலப்­ப­கு­தியில் இலங்கை கடற்­படை மீது நடத்­தப்­பட்ட பல தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை தாங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. நேர­டி­யாக அவர் தலைமை தாங்கி தாக்­கு­தல்­களை நடத்­தி­னாரா என்­பதை உறு­தி­யாக கூற­மு­டி­யாத போதும் அவ­ரது மேற்­பார்வை, ஆலோ­ச­னையின் கீழ் தாக்­கு­தல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் நடைபெறுகின்றன. அத்துடன் தற்கொலை குண்டுதாரிப் பெண் களை தயார்படுத்தும் திட்டங்களிலும் அவர் பங்கெடுத்தாரா என்பது குறித் தும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப் பட்டுள்ளது.’ என்றார்.

SHARE