ஒரு படத்தில் வெற்றி அடைந்தால் பல பட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்

169

இளம் நடிகைகளில் தற்போது ரசிகர்களால் மிக கவனிக்கப்படும் நடிகையாக இருந்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா.

கன்னடத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.

அண்மையில் ரஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது ” ஒரு படத்தில் வெற்றி அடைந்தால் பல பட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

அதன்பின் அதைவிட நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எனது கன்னோட்டத்தில் பணமும் பட வாய்ப்புகளும் முக்கியம் இல்லை.

மேலும் அந்த படத்திற்காக எந்த அளவு நாம் உழைத்தோம் அதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்று தான் முக்கியம்” என்று மனம் திறந்து பேசினார் ரஷ்மிகா.

SHARE