
ராணா
தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல செய்ய முடியும்ங்கற நம்பிக்கை. சிக்கலான கேரக்டர்கள்ல நடிக்கறது எனக்குப் பிடிக்கும். காதலிக்க நேரம் இல்லை. காதல்ங்கறது அதுவாக தேடி கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன்.
