பொதுநூலகம் ஒன்றை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்-வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன்

395

 

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் இன்று பொது நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொது நூலகம் ஒன்றுக்கு நிரந்தரமான கட்டடம் ஒன்றை இதுவரை பெறுவதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் நடிவடிக்கை எடுக்காத நிலையில், பால் பண்ணைக்கு சொந்தமான கட்டடமொன்றில் தற்காலிகமாக பொதுநூலகம் இன்று கரைச்சி பிரதேசசபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், உள்ளுராட்சி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் உள்ளிட்ட பல முக்கிய மாவட்டத்தின் பிரமுகர்களும், மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தனிநாயகம் துணை தவிசாளர் செந்தூரன் மற்றும் கரைச்சி பிரதேசசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்கள் என பெருமளவான வாசகர்கள் மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு  வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் உரையாற்றும் போது,

இந்த மாவட்டத்துக்கான பொதுநூலகம் ஒன்றை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நூலகங்கள் எமது நண்பர்கள். இன்று கணணி வலைத்தளத்தில் வாசிப்புக்கள் இருந்தாலும் அவை எந்த நேரமும் சாத்தியப்படுவதில்லை. மின்சாரத்தடை இணைய தாமதங்கள் இடையூறுகள் தடைகளால் கணணி வலையில் முழுமையான பலனை சில வேளைகளில் பெறமுடியாது போய்விடுகின்றது. ஆனால் நூல்களும் நூலகங்களும் எமக்கு நிறைந்த பலனை தருகின்றது.

கரைச்சி பிரதேசசபையின் இந்த முயற்சி இன்று ஒரு செயல்வடிமாகி இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. பிரதேசசபைகள் தான் மிக முக்கியமான மக்களோடு நெருங்கிய பணியை செய்யக்கூடியது ஆற்றல் உள்ளது. அதனால் பிரதேசசபைகள் தன்னலமற்ற சேவையை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும்.

மக்கள் பணி முழுமையாக பிரதேசபைகளால் செய்யப்படுகின்ற பொழுதுதான் மகேசன் மனம் குளிர்கின்றது .அத்தோடு இன்று பேசப்படுகின்ற இராணுவப் பயன்பாட்டில் இருக்கின்ற காணிகள் தொடர்பாக முழுமையான தகவல்கள் தேவைப்படுகின்றது. அதனடிப்படையில் முன்னுரிமைப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார்.

SHARE