
ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மதுரையில் ஒரு நகைக்கடை திறப்பு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் தந்தையுடன் அரசியலில் கரம் கோர்ப்பீர்களா என கேட்கிறீர்கள்.
அப்பாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சிறுவயதில் இருந்தே அவருக்கு சமூக அக்கறையும், அரசியல் தெளிவும் இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த தெளிவு கிடையாது. எனவே, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.
என் துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் தான், கவனம் உள்ளது. அரசியலில், ரஜினி, கமல் இருவரும் இணைவார்களா எனக் கேட்டால், நான், என் தந்தையை பற்றி பேசுவதே சரியானதாக இருக்கும். மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது.

என் தந்தை நல்ல மனிதர்; திறமையானவர். அவர் அரசியலில் ஜொலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.