தனுசுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை

196
தனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகை

தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மாரி செல்வராஜ் உடன் கவுரி கிஷன்மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்திருந்த கவுரி கிஷன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE