யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

464

11071726_10152718091572409_8925747125979265472_n

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களின் பயன்பாட்டிற்கென கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த இந்த விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், அங்கு மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எழுந்து,

மீள் குடியேற்றம் என்று கூறுகிறார்கள், ஆனால் ஓசை படாமல் தமிழர்களது வீட்டை இடித்து தள்ளுகிறார்கள்.

வலி.வடக்கில் உறுதி அளிக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை. அத்துடன் மக்களது காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு சத்தமின்றி ஆலயங்கள், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் மக்களது குடியிருப்புக்கள் இடிக்கப்படுகின்றன என கூறியதும் மேடையில் இருந்த அனைவரும் வாயடைத்துப் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கத்திற்கு சாட்டையடி கொடுக்கும் வகையில், விக்னேஸ்வரனின் பேச்சு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE