‘பாராசைட்’ நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

161

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் திரைப்படமான ‘பாராசைட்’ நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) பிரமாண்டமாக நடைபெறுகிறது.

ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ‘பாராசைட்’ பெற்றுள்ளது.

இதில் போங் ஜுன் ஹோ இயக்கிய இந்த திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம்,  திரைக்கதை,  வெளிநாட்டு படம்,  இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் பாராசைட் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான இந்த விருது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவத்தை தருவதாக  கருதப்படுகிறது. அந்த வகையில் . கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறும் இவ்விழாவில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

SHARE