படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜய் சென்னைக்கு புறப்பட்டார்.

155

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கும் நிலையில் வில்லனாக விஜய் சேதுபதி நடிகின்றார். மேலும் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வருமான வரித்துறையினரின் சோதனைக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜய் சென்னைக்கு புறப்பட்டார்.

வருமான வரித்துறையின் சோதனை அனைத்தும் முடிந்து, விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் எந்தவித குழப்பமும் இல்லாமல் விஜய் மிகவும் வழமைப்போல இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி இல்லாமல், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோரை கொண்டு, படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து விஜய்க்கு சோதனைகள் வந்தாலும் அவர் இவ்வாறு வழமைபோல எளிமையாக இருப்பதை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் உள்ளனர்

SHARE