தமிழில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக மாறினார்.
மேலும், சென்ற வருடம் நடிகர் ரஜினிகாந்த நடித்த பேட்ட திரைப்படத்தில் இவரும் ஒரு சிறிய கதாபத்திரத்தில நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து சிம்ரன் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். பழைய வேகத்துடன் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.
அண்மையில் கூட காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தனது சொந்த யூடியூப் சேனலில் பதிவிட்டுருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சிம்ரனுக்கு என்ன ஆனது என்று கேட்க, ஆனால், அது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சி அது என்று தெரிய வந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.