தமிழ், தெலுங்கு உலகில் முன்னிணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கிரிக்கெட் வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் எனவும், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் எனவும் தெலுங்கு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனுஷ்கா ”காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.
ஒரு தொழில் அதிபரை காதலிக்கிறேன் என்றனர். டொக்டரை விரும்புவதாக கூறினார்கள். அதன்பிறகு என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து பேசினார்கள்.
இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்கின்றனர். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்ற வருத்தம் ஏற்படுகிறது” எனத் கவலை தெரிவித்துள்ளார்