அஜித்தின் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகின்றார்.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்த சில கருத்துக்களையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்தவகையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லப்படியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கமர்சியல் படமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த படத்தில் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளையும் சேஸிங் சாகசங்களையும் ரசிகர்கள் பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.