அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

392

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக தாம் நல்லதொரு சந்திப்பை நடத்தியுள்ளதாகவும், சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு, அவுஸ்ரேலியா ஆதரவளிப்பதற்கான வழிகள் குறித்து பேசப்பட்டதாகவும், அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE