
துல்கர் சல்மான்
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்தப் படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதுபற்றி துல்கர் சல்மான் கூறியதாவது: தேசிங்கு ஐந்து வருடமாக உழைத்துள்ளார். நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் மிக உண்மையாக சினிமாவை நேசிப்பவர். இங்கு எல்லோருமே நல்ல மனதுக்காரர்கள். தான் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லோரும் எல்லோரையும் பாராட்டுவது நிஜம்.
