ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் டொம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா

198

பிரபல ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் டொம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக 63 வயதான ஹாங்க்ஸ் தனது முகப் புத்தகத்தில் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு சளி, சில உடல் வலிகள் இருந்தது. சற்று சோர்வாக காணப்பட்டோம். ரீட்டாவுக்கு குளிர் காய்ச்சலும் வந்து போயின.

இதையடுத்து இருவரும் மருத்துவ ஆலோசனையைப் பெற்றோம். அதில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை அடுத்து , பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் வரை நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவுஸ்ரேலிய அரசால் சிகிச்சைப் பெற்று வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

 

SHARE