விமர்சனம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த சமந்தா

274
படம் தோற்றால் விமர்சிப்பதா? சமந்தா வருத்தம்

சமந்தா
தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார்.
படத்துக்கு ஜானு என்று தலைப்பு வைத்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. தெலுங்கு இணையதளங்கள் சமந்தாவை தோல்வி பட நடிகை என்று விமர்சித்தன.
சமந்தாதன்னை விமர்சித்தவர்களுக்கு சமந்தா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “ஒரு கதாநாயகன் தொடர்ந்து 3 தோல்வி படங்கள் கொடுத்தாலும், அவரது படங்கள் வரும்போது ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கதாநாயகியை குறை சொல்கிறார்கள். கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளமும் கொடுப்பது இல்லை. நடிகைகளும் நடிகர்களைப்போல் கடுமையாக உழைக்கத்தான் செய்கிறார்கள்” என்றார். தற்போது சமந்தா விக்னேஷ் சிவன், அஸ்வின் சரவணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார்.
SHARE