
விஜய் சேதுபதி
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: விஜய் சார் மீது எனக்கு இருக்கிற காதல் அவருக்கு நான் கொடுத்த முத்தத்திலேயே அவருக்கு தெரியும். மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மதத்தை சொல்லி மனிதர்களை பிரிக்கிறார்கள். கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவில் எந்த மதமும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.