இந்த சமூகம் பெண்களை போதைப்  பொருளாக பார்ப்பதாக-ரகுல் ப்ரீத் சிங்

221

இந்த சமூகம் பெண்களை போதைப்  பொருளாக பார்ப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன. சிலர் ஆபாசமாக திட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்து ரகுல் பிரீத் சிங் கூறியிருப்பதாவது “நடிகைகளை சிலர் கேவலமாக பார்க்கிறார்கள். சினிமாவில் நடிப்பவர்கள்தானே இவர்களால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால் சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.

இவை மனதளவில் என்னை மிகவும் பாதித்து உள்ளன. பெண்களை போதை பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE