கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று முதல் படப்பிடிப்புகள் இரத்து

190

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. உள்ளூரிலும்,  வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி சீரியல் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன.

அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர்,  நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக திரையுலகிற்கு சுமார் 200 கோடி ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

SHARE