இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான திகதிகளையும் அவர் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால் இந்த படத்துக்கு ‘800’ என்றே தலைப்பிடவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.