இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!

335

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி வரையான காலப்பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மூவரில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE