பொன்.செல்வராசா எம்பியின் வாகனத்தில் மோதி காயமடைந்தவர் பலி

345

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பயணித்த வாகனம் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் கல்லடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்தவேளை, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தனக்கும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்பட வில்லையென பொன்.செல்வராசா எம்.பி. தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்.செல்வராசா எம்பியின் வாகனத்தில் மோதி காயமடைந்தவர் பலி

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்டபினர் பொன்.செல்வராசாவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்தவர் மரணமானதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று  பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இவர்  படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இறந்தவர் வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (62) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதியை குறுக்கறுத்துச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது, மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் வான் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

றந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

SHARE