பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும், மீனவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். வட்டுவாகல் களப்பு மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் இதனால், மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
அத்துடன் களப்பு கடல் அரிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை தவிர மீனவ கிராமத்திற்கு செல்லும் வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கடலுக்கு செல்லும் வழியின் குறுக்கே இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
இராணுவ முகாம் இருப்பது பிரச்சினையல்ல என்ற போதிலும் தமது இலகுவான பயணத்திற்கு வீதி திறக்கப்பட வேண்டும் எனவும் மீனவர்கள் கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர், சுனில் அந்துன்நெத்தி உள்ளிட்டோர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இது சம்பந்தமாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் , நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூறியுள்ளார்.
இதேவேளை அண்மையில் ஜே. வி. பி உறுப்பினர்கள் நந்திக்கடல் களப்பை சுத்தம் செய்தமை குறிப்பிடத்தது.