சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாந்தனுவின் வீடியோ

284
22 பேர் ஆட வேண்டிய விளையாட்டை தனியா ஆடிய சாந்தனு... வைரலாகும் வீடியோ

சாந்தனு
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது.
ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேட்டிங், பவுலிங், பீல்டிங், அம்பையரிங் என அனைத்தையும் அவர் ஒருவரே செய்வது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் மகேந்திரன்  “என்ன கொடுமை மச்சான் இது… 22 பேர் ஆட வேண்டிய கேம நீ மட்டும் ஆடுற… கோ கொரோனா கோ”  என கமெண்ட் செய்துள்ளார்.

View this post on Instagram

#QuarantineLife w/out wife ??

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu) on

SHARE