மைத்திரியின் தம்பியை போல கோத்தாவிற்கு நடந்திருந்தால் நாட்டின் கதி என்ன?

368

 

maithiri-mahi_ci

பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கியது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபாய ராஜபக்சவை அன்று யாராவது தாக்கியிருந்தால் அந்த மாவட்டமே அழிக்கப்பட்டிருக்கலாம்  என கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

mahinda_pasikuda_001
maithiri-mahi_ci

நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அன்று அவ்வாறான ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால், அந்த மாவட்டமே அழிந்திருக்கும் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

எனினும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரை கோடரியில் தாக்கியதால் எங்கும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை, இது தான் நல்லாட்சி என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து மகிந்தவின் ஆட்சிக்கும், மைத்திரியின் ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை மக்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE