சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் நடிகை கீர்த்தி பாண்டியன்

269
லாக்டவுனில் விவசாயியாக மாறிய நடிகை.... சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ வைரல்

கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகை கீர்த்தி பாண்டியன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை உழும் வீடியோவை வெளியிட்ட அவர், தற்போது அந்த நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

SHARE