யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.

427

 

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 1ம் திகதி ஆழியவளை பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச அமைப்பாளர் தங்கராசா காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது.

f

 

 

 

 

 

 

 

சுயதொழில் முயற்சியை ஊக்குவித்து எமது தேச மக்களை சொந்தக் காலில் தங்கி நிற்கச் செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.

Goat 15

 

 

 

 

 

 

 

ஆடுவளர்ப்பில் ஈடுபட விரும்பியவர்களுக்கு நல்லின ஆடுகளும், தையல் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு தையல் இயந்திரங்களும், வர்த்தக நடவடிக்கை செய்ய விரும்பியவர்களுக்கு வியாபார பொருட்களும், கோழி வளர்ப்பில் நாட்டம் உள்ளவர்களுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளும், கடற்தொழில் செய்ய விரும்பியவர்களுக்கு கடற்தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

Goat 12
 

 

மேற்படி நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திட்ட இணைப்பாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கி வைத்தனர்.

a (1)

 

 

 

 

 

 

 

 

Goat 6

SHARE