இரண்டு பாகங்களாக வெளிவரப்போகும் இந்தியன் 2

271
இந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டம்?

கமல்ஹாசன், ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர். இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷுட்டிங், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
கமல்ஹாசன்இதையடுத்து இந்தியன் 2 படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கப்பட்டது. இரண்டு இடங்களில் அதன் பணிகள் நடைபெற்று வந்தது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே சுமார் 5 மணிநேரம் ஓடியதாகவும், அதை பார்த்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர்  வியப்படைந்ததாக கூறப்படுகிறது. அனைத்தும் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகள் என்பதால், அதற்கு கத்தரி போடாமல் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டாலாமா என்று ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பு யோசித்துக் வருகிறார்களாம்.
SHARE