காணாமற்போனோர் தொடர்பிலான பரணகம ஆணைக்குழு விசாரணைகள் எதிர்வரும் 6ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வியாக்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் 06ஆம் மற்றும் 07ஆம் திகதிகளில் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலும் 08ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழு அமர்வுகளில் பொது மக்கள் சென்று சாட்சியமளிப்பதை புறக்கணிக்குமாறு தமிழ் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்ஆணைக்குழு கடந்த ஜனைவரி மாதம் தமது பகிரங்க விசாரணைகளை ஆரம்பித்தது.
அந்தவகையில் அம்பாறை தவிர்ந்த வடக்கு,கிழக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.