வடக்கு மாகாணத்தின் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் வழங்கிவைத்தார் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்..

372

வடக்கு மாகாணத்தின் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் வழங்கிவைத்தார் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்..

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையான இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் 02-04-2015 வியாழன் மாலை 2 மணியளவில் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட ஒன்றுகூடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இவ்வொன்றுகூடலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சம்பந்தன், திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு.செல்வம் அடைக்கலநாதன்,  வடக்கு மாகாணத்தின் மீனவர் சமாசங்களின் தலைவர்கள் மற்றும்  இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விசேட ஒன்றுகூடலில் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இளுவைப்படகுகளால் தினந்தோறும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அத்தோடு எமது மீனவர்கள் பயன்படுத்தும்  தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் எமது கடல் வளம் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதை தடுக்கும் செயல்த்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரால் விசேட மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
unnamed (12)
SHARE