பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா)

419

 

அரந்தலாவையில் பிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

karuna  ltte.piraba-karunaa Mahinda Rajapaksa, Vinayagamoorthi Muralitharan

ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பினரால் கிராமத்தின் எல்லை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் 600 பொலிஸாரும் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு எளிமையான தலைவர், அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நான் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக இருந்த போது எனது பகுதியில் 98 வீதமான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து மேற்கொண்டேன்.

முன்னாள் ஜனாதிபதியின் வெற்றிக்காக நான் எனது பிரதேசத்தில் கடுமையாக உழைத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கையில் 13வது அரசியலமைப்பிற்கு அப்பால் நடைமுறைப்படுத்த அவசியமில்லை, வட,கிழக்கு பகுதியில் காணப்படுகின்ற பொலிஸ் அதிகாரங்களை குறித்து அவர்கள் கவலைப்பட தேவையில்லை,

இலங்கையில் ஒற்றையாட்சிதான் நடைபெற வேண்டும், தற்போது நாட்டில் சுதந்திரமாக வாழகூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

சிங்கள மாணவர்கள் வட, கிழக்கு பகுதிகளிலுள்ள பல்கலைக்கழங்களில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை விட நம்மக்களுக்கு என்ன வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையின் பாதியை கேட்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தது போல இலங்கை இராணுவத்திலும் தனியான குழுக்கள் காணப்பட்டன என சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்,

நான் பொதுமக்களை படுகொலை செய்யும் சம்பவங்களுடன் இணைத்துக் கொள்ளப்படவில்லை எனவும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் தற்கொலை குண்டுதாரிகள் தனியாக இருந்தனர், இதன் தலைவராக பொட்டு அம்மான் விளங்கினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த போது சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை எனவும்,

2004ம் ஆண்டிற்கு பின்னர் அவ் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் எனக்கும் பங்கிருப்பதாக நான் குற்றம் சாட்டப்பட்டேன், எனினும் நான் கொலையாளி அல்ல. நான் அந்நேரத்தில் கிழக்கின் தலைவராக செயற்பட்டு வந்தேன், எனினும் என் வாழ்நாளில் அதிகமான நாட்களை வடக்கிலேயே கழித்து வந்தேன்.

அங்கு அரசியல், இராணுவம் மற்றும் வெளிநாட்டு துறைகள் என 3 துறைகள் காணப்பட்டன.

யுத்தம் நடைபெற்ற போது நான் முன் அரங்குகளிலேயே இருந்தேன், நான் அவர்களை விட்டு நீங்கிய போது பொட்டு அம்மான் மட்டக்களப்பில் 500 அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தார்.

அவர்களை கொலை செய்யுமாறு நான் உத்தரவிட்டேன் என என்மீது உண்மைக்கு புறம்பாக பழி சுமத்தி விட்டார்கள்.

பிரபாகரனின் சந்தேகம் மற்றும் நம்பிக்கையில்லாமையினால் 15 இரண்டாம் நிலை தலைவர்கள் அவரினால் கொலை செய்யப்பட்டனர் என முன்னாள் பிரதி அமைச்சர் பகிரங்கப்படுத்தினார்.

பிரபாகரன் உண்மையிலேயே தமது விடுதலைக்காக போராடவில்லை, மக்களை தன்வசப்படுத்தி கொள்ளவே போராடினார், இதனாலேயே அவருடைய தலைமைத்தவத்தை நிராகரித்து நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன்.

SHARE