தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்த சோனியா அகர்வால்

327
தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இப்படத்தின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர்  ஏற்பட்டதால் 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், காதல் கொண்டேன் படத்தின் 17-வது ஆண்டு வெற்றியை டுவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். இதையொட்டி சோனியா அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், “இறைவனுக்கு, மயக்கும் தமிழ்நாட்டுக்கும், செல்வராகவன் மற்றும் மிஸ்டர் கஸ்தூரிராஜாவுக்கு நன்றி, அற்புதமான ரசிகர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி 17 வருடங்கள் ஆகிறது.
சோனியா அகர்வாலின் டுவிட்டர் பதிவு தனுஷ் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. காதல் கொண்டேன், தமிழ் சினிமா இதுவரை காணாத, எந்தப் படத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு படம்,” எனக் கூறியுள்ளார்.
SHARE