எதிர்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய வேண்டும் – சபாநாயகர்

332
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை இன்னும் சில முடிவுகளை ஆராய்ந்து அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது இதன் போதே அவர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும், இதுகுறித்த தீர்மானம் எடுக்க தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான சர்ச்சை எழுதிருந்த நிலையில், இன்று தாம் அதுபற்றிய முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதேவேளை, தினேஸ் குணவர்த்தனவை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று பிற்பகல் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

SHARE